Tuesday, 26 August 2014

உன் சுவாசமே நானாவேன் !

அருகம்புல்லா வளர்ந்த புள்ள 
அரும்பு மலர்   சிரிப்பழகாள் 
கடயாப்பொட்டி கக்கத்திலே 
கருகமணி கழுத்தினிலே 
கலகலக்கும் நடைநடந்து 
களை எடுக்க போரபுள்ள.,.! 

கடயாப்பொட்டி எறக்கவிட்டு 
கக்கத்திலே எனை அணைச்சா 
உன் கறுத்த கண்ணம் செவக்கமட்டும் 
கட்டி முத்தம் நான் தருவேன்
உன் கட்டழகு நோகாமல்!

அட வெட்டிப்பய மவனே
வெட்டவெளி பொட்டலிலே
வெக்கங்கெட்டு பேசிரியே .

புத்திகெட்ட மாமா
ஊரு சனம் பாத்துப்புட்ட
இந்த பொட்டபுள்ள உசுர
பொசுக்குணு போயிடுமே
கொஞ்சம் புரிஞ்சிக்க மாமா!

அடி கட்டான கட்டழகி
கனிவான பேச்சழகி
ஓங் உசுரு எனக்குள்ளே
பத்திரமா வைச்சிருக்கேன்
அந்த ஏமன் வந்து கேட்டாலும்
என் உசுர கொடுப்பேன்டி.

ஏங்ராசாத்தி ஓங் உசுரே
ஒரு நாளும் எனைப்பிரிய
விடமாட்டேனு  மரிக்கொழுந்து
வாசக்காரி உன் மாமன் மனசு தெரியாதா?

கால நேரம் கூடி வரும் காத்திரு மாமா
இந்த மொட்டழகும் கட்டழகும்
என் கட்டழகன் உனக்குதான் மாமா
என் கருகமணி கழட்டி விட்டு
கழுத்தில் தாலி நீ கட்டும்வரை
பொறுத்திரு மாமா

பூ மெத்தை நானாவேன்
பூஞ்சோலை காற்றாகி
உன் சுவாசமே நானாவேன்
இப்ப வழிவிடு மாமா.....!

1 comment:

  1. இந்த கவிதையை யாருமே பார்க்கவில்லை

    ReplyDelete