புத்தாடை பூத்தது புது உலகம் பிறந்தது
புதுமை மனப் பூரிப்பூ எழிலாய் உள்ளப் பொழிவு!
எண்ணங்களில் வண்ண வண்ண பூக்களாய்
வீதியெங்கும் ஒளி வெள்ள பேரழகு!
வெடியோசை மின்னல் இடியாய்
வண்ண வான வேடிக்கை!
மத்தாப்பூ சிரிப்பாய் மனம் கொண்டாடும்
மகத்தான பெருநாள்!
உற்றார் உறவினரும் ஒருமித்த அன்பாய்
தித்திக்கும் இனிப்போடும் திகட்டா களிப்போடும்
திகட்டாத அன்போடும்!
எல்லைகள் கடந்த இன்பப் பெருங்கடலாய்
இல்லங்கள் தோரும் மற்றவர் மகிழ்ச்சியில்
மனப் பெருமிதம் கொண்டு .
அன்பு ஊற்றாய் பெருகி உள்ளம்
கொள்ளை கொள்ளும் உண்ணத திருநாள்!
இருண்ட அரக்கனை அழித்து
மகாபாரதத்தின் சுதந்திர விடியலாய்
ஒளிதீபம் ஏற்றிடும் மகாதினம்!
ஏழைகள் நெஞ்சிலும் மகிழ்ச்சிப் பெருக்கோடு
இன்முகச் சிரிப்பழகு காணும் இனிய திருவிழா!
மலர்விழி பூத்த அரும்பு மழலைகளின்
மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பாய்
முத்தாய்ப்பாய் உள்ளம் மகிழும் ஒளிவிழா!
வானம் விட்டு வான வில்லும் இறங்கி வந்ததோ
வாசல்தோரும் சிறுவர்களின் கரங்களிலே
காட்சி தந்ததோ!!!
மழலைகளின் சிரிப்பினிலே மயங்கிவிட்டதோ
வானவில்லும் வானத்துக்கு வழி கேட்டு
வீதியெல்லாம் சுற்றி வருகுதோ ?
ஏழுவண்ணம் வீதிகளில் ஊர்வலமாய்
நடந்து செல்லும் பேரழகு காண்பீரோ......!
இன்று வெண்ணிலவும் விடுமுறையில்
பூமி வந்ததோ? நம் இல்லங்களில்
நடமாடும் மங்கையரின் முகத்தினிலே
அமர்ந்துகொண்டதோ ?
ஆனந்தமாய் நாம் கொண்டாடும்
தீபாவளி நன்னாளே.....!