புத்தாடை பூத்தது புது உலகம் பிறந்தது
புதுமை மனப் பூரிப்பூ எழிலாய் உள்ளப் பொழிவு!
எண்ணங்களில் வண்ண வண்ண பூக்களாய்
வீதியெங்கும் ஒளி வெள்ள பேரழகு!
வெடியோசை மின்னல் இடியாய்
வண்ண வான வேடிக்கை!
மத்தாப்பூ சிரிப்பாய் மனம் கொண்டாடும்
மகத்தான பெருநாள்!
உற்றார் உறவினரும் ஒருமித்த அன்பாய்
தித்திக்கும் இனிப்போடும் திகட்டா களிப்போடும்
திகட்டாத அன்போடும்!
எல்லைகள் கடந்த இன்பப் பெருங்கடலாய்
இல்லங்கள் தோரும் மற்றவர் மகிழ்ச்சியில்
மனப் பெருமிதம் கொண்டு .
அன்பு ஊற்றாய் பெருகி உள்ளம்
கொள்ளை கொள்ளும் உண்ணத திருநாள்!
இருண்ட அரக்கனை அழித்து
மகாபாரதத்தின் சுதந்திர விடியலாய்
ஒளிதீபம் ஏற்றிடும் மகாதினம்!
ஏழைகள் நெஞ்சிலும் மகிழ்ச்சிப் பெருக்கோடு
இன்முகச் சிரிப்பழகு காணும் இனிய திருவிழா!
மலர்விழி பூத்த அரும்பு மழலைகளின்
மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பாய்
முத்தாய்ப்பாய் உள்ளம் மகிழும் ஒளிவிழா!
வானம் விட்டு வான வில்லும் இறங்கி வந்ததோ
வாசல்தோரும் சிறுவர்களின் கரங்களிலே
காட்சி தந்ததோ!!!
மழலைகளின் சிரிப்பினிலே மயங்கிவிட்டதோ
வானவில்லும் வானத்துக்கு வழி கேட்டு
வீதியெல்லாம் சுற்றி வருகுதோ ?
ஏழுவண்ணம் வீதிகளில் ஊர்வலமாய்
நடந்து செல்லும் பேரழகு காண்பீரோ......!
இன்று வெண்ணிலவும் விடுமுறையில்
பூமி வந்ததோ? நம் இல்லங்களில்
நடமாடும் மங்கையரின் முகத்தினிலே
அமர்ந்துகொண்டதோ ?
ஆனந்தமாய் நாம் கொண்டாடும்
தீபாவளி நன்னாளே.....!
வெண்ணிலவும் விடுமுறையில்
ReplyDeleteபூமி வந்ததோ? நம் இல்லங்களில்
நடமாடும் மங்கையரின் முகத்தினிலே
அமர்ந்துகொண்டதோ ?
அழகான உவமை... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Deleteவெற்றி வேல் வாழ்க வளமுடன்
Deleteஅருமை... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Delete//மழலைகளின் சிரிப்பினிலே மயங்கிவிட்டதோ
ReplyDeleteவானவில்லும் வானத்துக்கு வழி கேட்டு
வீதியெல்லாம் சுற்றி வருகுதோ ?//
உங்களின் இந்த வார்த்தைகளை கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
தங்கள வருகைக்கும் வாழ்த்துக்கும் கவிதை வரிகளை ரசித்தமைக்கும் மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி
Deleteகவிதை அருமை... வாழ்த்துக்கள் கவி நாக சார்... :)
ReplyDeleteவணக்கம் சகோதரி பிரியா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் மிக்க மகிழ்ச்ச மிக்க நன்றி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோதரர் ரூபன் தங்களின் தீபாவளி கவிதைப் போட்டியில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஇல்லறத்தின் மகிழ்ச்சி இது போன்ற பண்டிகை காலத்தில் என்பதை அழகாக சொன்ன விதம் வெகு சிறப்பு.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்தகள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில்
வெற்றி பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள்!
அழகிய அருமையான கவிதை! ரசித்தேன்...
வணக்கம் சகோதரி தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி இரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தொடருங்கள் சகோதரி தொடர்கிறேன்
Deleteகவிதை அருமை!
ReplyDeleteதீபாவளிக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteதீபாவளிக் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
என்னுடைய வலைப்பக்கம் வாருங்கள் வந்து பார்வையிடுங்கள் இதோ முகவரி
http://2008rupan.wordpress.com/2013/11/13/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-2/
என்னுடைய மின்னஞ்சலுக்கும் தனபாலன்(அண்ணாவின் மின்னஞ்சலுக்கும்) ...உங்கள் விபரங்களை அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்
முதலில் பதிவைப்பாருங்கள் விபரம் புரியும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரஞ்சனி அம்மா மீண்டும் வருகை தந்து வாழ்த்தியது மிகப்பெரிய பரிசாக நினைத்து மகிழ்ந்தேன் மிக்க நன்றி
ReplyDeleteவணக்கம் கிரேஸ் அவர்களே தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளித்தது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி போட்டியில் வெற்றிபெற்றதற்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரர் ரூபனுக்கு அன்பான வணக்கம் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் அனைத்தும் அறிந்தேன் எனது கவிதையும் தேர்வு பெற்று இருந்தது மிக்க மகிழ்ச்சி தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி நடத்தி அனைவரையும் பெருமைப் படுத்திய உக்கள் அன்பான செயல் திறனுக்கு வாழ்த்துக்கள் போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தாங்கள் கேட்டுக்கொண்டபடி விபரங்கள் அனுப்பியுள்ளேன் அன்புடன் நன்றி
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
மின்னும் தமிழை விளைத்த வியன்கவிதை
என்னுள் இருக்கும் இணைந்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteசான்றிதல் அனுப்ப வேண்டி உள்ளதால், தங்களின் முகவரி பற்றிய விவரங்களை கீழ் உள்ள மெயில்களுக்கு அனுப்பி வைக்கவும்...
ReplyDeleterupanvani@yahoo.com
dindiguldhanabalan@yahoo.com
நன்றி...
வணக்கம் சார் அன்றே ரிப்ளேயில் முகவரி விபரங்கள் அனுப்பிருந்தேன் பாருங்கள் ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதை போட்டியில் அனைவருக்கும் ஒத்துழைபு நல்கியமைக்கு மிக்க நன்றி
DeleteThis comment has been removed by the author.
Deleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவணக்கம் சகோதரி தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி
DeleteGgggy
Deleteவணக்கம்
ReplyDeleteதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Dfghj
Deleteநன்றி தமிழ்ப்பூங்கா
Deleteமிகவும் நன்றி
ReplyDeleteமிகவும் நன்றி
ReplyDeleteஅனை வருக்கும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நன்னா ள் வாழ்ததுக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDelete