Wednesday, 23 October 2013

நீயே என் மருந்தகம் !

நீயே என் மருந்தகம்        
அன்பே என் உழைப்பின்
இடையே நான்
கழைப்படையும் போதெல்லாம்
உன் நினைவுகளை
அள்ளிப் பருகுகிறேன்
காலை முதல் உழைத்து
மாலை உன் முகம்
காணும் போது
உன் குளிர்ந்த பார்வை
என் உடல் ரணங்களுக்கு
மருந்திடுகிறது
மறு கணம் உன் அணைப்பில்
ரணமான வலியெல்லாம்
மாயமாய் மறைகிறது
அன்பே நீயே என் மருந்தகம்...

2 comments:

  1. அருமை சார்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete