எட்டு வச்சி நான் வந்தேன்
எட்டு மாசம் உன்ன சுற்றி
கட்டெறும்பாஓடி வந்தேன் .
அச்சு வெல்ல பேச்சழகில்
கருவிழியால் காதல் சொன்ன
கட்டழகி முத்தம்மா …
ஒருநாள் காணலேனா
அடி மனசு வலிக்குமடி
ஆத்தா அப்பன்
தடைபோட அழுது கலங்கி
மனம் தவிச்சு இருப்பதேனோ ?
நாம் காதலிச்ச கதையெல்லாம்
களத்துமேடு சொல்லுமடி
எத்தனை நாள் காத்திருந்தேன்
ஏங்கி நானும் தவிச்சிருந்தேன்
நான் அள்ளி வச்ச ஆசையில
கொள்ளிவச்சி போறியேடி
இடி போலவார்த்தை சொல்லி
எம்மனசு களங்குதடி
செத்த நேரம் நில்லு புள்ள
சுத்தமான காதல் இது
சத்தியமா கைகூடும்
ஆத்தா கருமாரி
நம் காதலுக்கு துணையிருப்பாள்
கலங்காதே கண்மணியே
கைப்பிடிப்பேன் நான் உனையே......
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் சார் கவிச்சோலை வலைச்சரத்தில் இணைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
Deleteஉங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete..."சுத்தமான காதல் இது
சத்தியமா கைகூடும்" ரசித்துப் படித்தேன்
வணக்கம் சார் வலைச்சரத்தில் கவிச்சோலை அறிமுகம் ஆனதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கவிதை ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி
Deleteஅழகான கிராமத்து காதல்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோதரி தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDelete