Saturday, 27 July 2013
Tuesday, 23 July 2013
பிறையானவளுக்கு !
வானத்து நிலவே.....
வெகுதூரத்தில் வாழும்
வண்ணநிலவே -உன்
மலர்முகத்தில் இருள்
படர்ந்த சோகமேனோ ?
மேக ஓடைநீந்தும் போது
காயம் பட்டதோ ?
இடிமின்னல் சிதறலிலே
இதயம் சுட்டதோ!
நடந்ததென்ன புரியவில்லை
நானும் தவிக்கறேன்!
நிலவே உன் முகமலர்ந்து
சிரித்து நீயும் ஒளியும்
தருகிறாய் நானும்...
மனம் குளிர்ந்து
மகிழ்வு கொள்கிறேன்!
வானமே இடிந்ததுபோல்
தேய்பிறையாய் தேய்ந்து
நீயும் சோகம் கொள்கிறாய்
வளர்வதுவும் தேய்வதுவும்
வாழ்க்கையானதே
என எண்ணி எண்ணி
நீ அழுவதுதான் அமாவாசையோ......
உன் நிலையறியா தவிப்பினிலே
நிம்மதியை நானும் இழக்கிறேன்!
உன் வானம் வந்து பார்த்திடவே
மனமும் ஏங்குதே!
Wednesday, 17 July 2013
வான் முத்தங்கள் !
சூராவளியாய் கடலில் நீரெடுத்து
வானத்துக்கு மணமுடித்து
மோகங்கொண்டு மேகமாய்
கருவாகி காற்றின்கற்பம்
மின்னலாய் உடைத்து
இடியோசையுடன் பிரசவித்து
மழைக்குழந்தைகளாய்
இயற்கை வளங்களில்
இனிமையான விளையாட்டு
முத்தழகு குழந்தைகள்
பூமியை முத்தமிடும் மழைத்துளிகள்...!
வானத்துக்கு மணமுடித்து
மோகங்கொண்டு மேகமாய்
கருவாகி காற்றின்கற்பம்
மின்னலாய் உடைத்து
இடியோசையுடன் பிரசவித்து
மழைக்குழந்தைகளாய்
இயற்கை வளங்களில்
இனிமையான விளையாட்டு
முத்தழகு குழந்தைகள்
பூமியை முத்தமிடும் மழைத்துளிகள்...!
Wednesday, 10 July 2013
காதல் கடிதம் !
உன்னில் நான் சரணடைந்து வெகுநாட்கள் ஆகிறது. என் அன்பை வார்த்தைகளால் கொட்டியும் விட்டேன் நீ வெறுப்பும் காட்டவில்லை விருப்பமும் சொல்லவில்லை என்னைக்கொல்லும் ஆயுதமாய் உன் மௌனம்!
மனதை திருடி மடியில் வைத்துக்கொண்டாய்! அன்பை வளர்த்து உனக்குள்ளேயே புதைத்துக்கொல்கிறாய்!
என்னை வதை படுத்தி உன் மௌன வார்த்தைகளால் என்னை சிறைபடுத்தி விட்டாயே! உன் அன்பின் வாசல் திறக்கவில்லை என்றாலும் லேசாக சன்னலையாவது திறக்கக்கூடாதா..? உன் அன்பின் வாசத்தில் வாழ்ந்துவிட மாட்டேனா? அடியே பெண்ணே உன் செப்படி வித்தையால் சீரழிந்து நிற்கிறேனே அடி பாசாங்குக்காரி பேசிக்கழப்புகிறாய் பேசாமல் மௌனமாய் கொல்கிறாய் அய்யோ.... ஆடிக்காற்றில் அம்மியாய் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்து ஏளனமாய் மனதுக்குள் மௌனமாய் திட்டுகிறாய் இன்னும் என்ன செய்யப்போகிறாய் ..?ஏன் இந்த சித்து விளையாட்டு உன்னில் நானிருக்கிறேன் என்னில் நீயிருக்கிறாய் காதலை சொல்வதற்கு என்ன தயக்கம் அடி பைத்தியக்காரி உன்னை என் இதய சிம்மானத்தில் வைத்து உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் என்னை இழந்து விட்டு முட்படுக்கையில் உறக்கமின்றி தவிக்க போகிறாயா?
இது காதல் உனக்கிட்ட கட்டளையா? இல்லை காலம் எனக்கு தரும் தண்டனையா? சில நேரம் வானத்து நிலவாய் தொலைவில் நின்று மமதை கொள்கிறாய் சிலநேரம் வீசும் தென்றலாய் சிரித்துக்கொண்டு என்னை கடந்து செல்கிறாய் உன்னை புரிந்து கொள்ள முடியாமல் புயலில் சிக்கிய புழுவாய் என் மனம் தள்ளாடுகிறது!
பூக்களில் தேனிருக்கும் பூக்கள் அறிவதில்லை வண்டுகள் தெரிந்து வந்தால் அதன் அன்பும் புரிவதில்லை மகரந்த சேர்க்கையில்தான் மௌனமாய் உணர்ந்து கொள்ளும் தன்னில் இத்தனை இன்பங்களா என்று! புரிந்து கொள்ளடிப்பெண்ணே காமத்திற்கு ஒவ்வொரு நாளும் எல்லை உண்டு இந்த உலகத்தில் அன்புக்கு ஏதெடி எல்லை நான் உன்னை அன்பால் நேசிக்கிறேன்!
அன்பே உன் மௌனம் கலைத்துவிடு என் மனதோடு இணைந்துவிடு உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடவேண்டும் உன் மடியில் முகம் புதைத்து என் அன்பை சொல்லி அழவேண்டும் மனதும் மனதும் சேர்ந்தால்தானே இச்சைகூட சுவைக்கும் என் புழம்பல்கள் உனக்கு கேட்கவில்லையா இல்லை என்னையே உனக்கு பிடிக்கவில்லையா?
சிலந்தி வலையில் சிக்கிய ஈயாய் தினம் தினம் சாகாமல் சாகிறேனே! வேண்டாம் உன் மௌனம் கலைக்க வேண்டாம் மறுமொழி பேசவேண்டாம் நீ அன்பு அமுதம் தரவேண்டாம்! என் உயிரே வா.... உயிர்வதை சட்டத்தின்கீழ் ஒரு துளி விஷமாவது கொடுத்துவிடு என்னை கருணைக் கொலை செய்துவிடு காலம் உன்னை வாழ்த்தும் என் காதலும் உன்னை வாழ்த்தட்டும்............!
Saturday, 6 July 2013
காலத்தால் அழியா கண்ணதாசன் !
சிந்தனைக்கடலே!
செவியின்பத்தேனே!
கவி உலகமொன்றை
தமிழ் உலகுக்கு அற்பனித்தவனே!
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழே கண்ணதாசா நீயல்லவோ....!
தமிழுக்கும் அழிவில்லை
உன் புகழுக்கும் அழிவில்லை!
தமிழ் உனக்கு சிம்மாசனம் கொடுத்தது
அந்த தமிழுக்கே மகுடம்
சூட்டி மகிழ்ந்தாய்
எங்களையும் மகிழச்செய்தாய்!
அருவியாய் கற்பனை கொட்டி
குருவியாய் கவிபாடி
காற்றிலே பாட்டுக்கோட்டை
கட்டி பவனிவந்தாய்!
காற்றுள்ளவரை உன் பாட்டிருக்கும்
அதை தமிழ் உலகம் கேட்டிருக்கும்!
காலங்கள் அனைத்தையும் கணக்கிட்டாய்...........
வாழ்க்கை கோலங்கள் உணரவைத்தாய்!
கண்ணனின் தாசனாய் வாழ்ந்திருந்தாய்!
காரிருளாய் பண்பாடு மறையாமல்
உன் கருத்துக்கள் ஒளி நிலவாய்....
அர்த்தமுள்ள இந்து மதம் நீ கொடுத்தாய்!
எம்மதமும் சம்மதமாய்
எல்லா மதத்துக்கும் காவியம் படைத்தாய்!
நீ காலத்தால் அழியாத பொண்ணோவியமாய்
மனித உள்ளங்களில் நிறைந்திருப்பாய்........
செவியின்பத்தேனே!
கவி உலகமொன்றை
தமிழ் உலகுக்கு அற்பனித்தவனே!
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழே கண்ணதாசா நீயல்லவோ....!
தமிழுக்கும் அழிவில்லை
உன் புகழுக்கும் அழிவில்லை!
தமிழ் உனக்கு சிம்மாசனம் கொடுத்தது
அந்த தமிழுக்கே மகுடம்
சூட்டி மகிழ்ந்தாய்
எங்களையும் மகிழச்செய்தாய்!
அருவியாய் கற்பனை கொட்டி
குருவியாய் கவிபாடி
காற்றிலே பாட்டுக்கோட்டை
கட்டி பவனிவந்தாய்!
காற்றுள்ளவரை உன் பாட்டிருக்கும்
அதை தமிழ் உலகம் கேட்டிருக்கும்!
காலங்கள் அனைத்தையும் கணக்கிட்டாய்...........
வாழ்க்கை கோலங்கள் உணரவைத்தாய்!
கண்ணனின் தாசனாய் வாழ்ந்திருந்தாய்!
காரிருளாய் பண்பாடு மறையாமல்
உன் கருத்துக்கள் ஒளி நிலவாய்....
அர்த்தமுள்ள இந்து மதம் நீ கொடுத்தாய்!
எம்மதமும் சம்மதமாய்
எல்லா மதத்துக்கும் காவியம் படைத்தாய்!
நீ காலத்தால் அழியாத பொண்ணோவியமாய்
மனித உள்ளங்களில் நிறைந்திருப்பாய்........
Wednesday, 3 July 2013
அமுத தமிழே.....!
அமுத தமிழே.....!
அன்புத் தமிழே...!
இனிமைத் தமிழே....!
இன்பத் தமிழே....!
முத்தமிழே....!
என் இனிய தமிழே...
நான் உன்னை நேசிக்கிறேன்.!
உன் அன்பை யாசிக்கிறேன் !
எப்போதும் உன்னையே
சுவாசிக்கிறேன் !
எல்லாமும் நீயே என்று
எனக்குள் யோசிக்கிறேன்!
எனக்குள் வா தமிழே !
உன்னால் நான் புகழ்
பெறவேண்டும் !
என்றும் உன் புகழை
நான் பாடவேண்டும்!
நான் உன்னில் லயித்திருக்கிறேன் !
எனக்குள் வா தமிழே....
காவியம் படைத்திட !
அன்புத் தமிழே...!
இனிமைத் தமிழே....!
இன்பத் தமிழே....!
முத்தமிழே....!
என் இனிய தமிழே...
நான் உன்னை நேசிக்கிறேன்.!
உன் அன்பை யாசிக்கிறேன் !
எப்போதும் உன்னையே
சுவாசிக்கிறேன் !
எல்லாமும் நீயே என்று
எனக்குள் யோசிக்கிறேன்!
எனக்குள் வா தமிழே !
உன்னால் நான் புகழ்
பெறவேண்டும் !
என்றும் உன் புகழை
நான் பாடவேண்டும்!
நான் உன்னில் லயித்திருக்கிறேன் !
எனக்குள் வா தமிழே....
காவியம் படைத்திட !
Subscribe to:
Posts (Atom)