வானத்து நிலவே.....
வெகுதூரத்தில் வாழும்
வண்ணநிலவே -உன்
மலர்முகத்தில் இருள்
படர்ந்த சோகமேனோ ?
மேக ஓடைநீந்தும் போது
காயம் பட்டதோ ?
இடிமின்னல் சிதறலிலே
இதயம் சுட்டதோ!
நடந்ததென்ன புரியவில்லை
நானும் தவிக்கறேன்!
நிலவே உன் முகமலர்ந்து
சிரித்து நீயும் ஒளியும்
தருகிறாய் நானும்...
மனம் குளிர்ந்து
மகிழ்வு கொள்கிறேன்!
வானமே இடிந்ததுபோல்
தேய்பிறையாய் தேய்ந்து
நீயும் சோகம் கொள்கிறாய்
வளர்வதுவும் தேய்வதுவும்
வாழ்க்கையானதே
என எண்ணி எண்ணி
நீ அழுவதுதான் அமாவாசையோ......
உன் நிலையறியா தவிப்பினிலே
நிம்மதியை நானும் இழக்கிறேன்!
உன் வானம் வந்து பார்த்திடவே
மனமும் ஏங்குதே!
ரசித்தேன் என்பதை விட என்ன சொல்ல முடியும்...? வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் ஐயா உங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது நன்றி
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Deleteஅழகு கவிதை...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தம்பி
Delete