Wednesday, 10 July 2013

காதல் கடிதம் !


உன்னில் நான் சரணடைந்து வெகுநாட்கள் ஆகிறது. என் அன்பை வார்த்தைகளால் கொட்டியும் விட்டேன் நீ வெறுப்பும் காட்டவில்லை விருப்பமும் சொல்லவில்லை என்னைக்கொல்லும் ஆயுதமாய் உன் மௌனம்! 

மனதை திருடி மடியில் வைத்துக்கொண்டாய்! அன்பை வளர்த்து உனக்குள்ளேயே புதைத்துக்கொல்கிறாய்! 

ஏனடி பெண்ணே உன் அன்பு தீண்ட எனக்கு அருகதை இல்லையா.... ? உன் பாசத்தை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் இல்லையா....?  உன் கண்கள் ஒன்று சொல்கிறது உன் கவிதை வேறு சொல்கிறது உன் சிரிப்பு ஒன்று சொல்கிறது நான் எதை எடுக்க எதை தொடுக்க.. எதை கொடுக்க 

என்னை வதை படுத்தி உன் மௌன வார்த்தைகளால் என்னை சிறைபடுத்தி விட்டாயே! உன் அன்பின் வாசல் திறக்கவில்லை என்றாலும் லேசாக சன்னலையாவது திறக்கக்கூடாதா..?  உன் அன்பின் வாசத்தில் வாழ்ந்துவிட மாட்டேனா? அடியே பெண்ணே உன் செப்படி வித்தையால் சீரழிந்து நிற்கிறேனே அடி பாசாங்குக்காரி பேசிக்கழப்புகிறாய் பேசாமல் மௌனமாய் கொல்கிறாய் அய்யோ.... ஆடிக்காற்றில் அம்மியாய் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்து ஏளனமாய் மனதுக்குள் மௌனமாய் திட்டுகிறாய் இன்னும் என்ன செய்யப்போகிறாய் ..?ஏன் இந்த சித்து விளையாட்டு உன்னில் நானிருக்கிறேன் என்னில் நீயிருக்கிறாய் காதலை சொல்வதற்கு என்ன தயக்கம் அடி பைத்தியக்காரி உன்னை என் இதய சிம்மானத்தில் வைத்து உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் என்னை இழந்து விட்டு முட்படுக்கையில் உறக்கமின்றி தவிக்க போகிறாயா?

 இது காதல் உனக்கிட்ட கட்டளையா? இல்லை காலம் எனக்கு தரும் தண்டனையா? சில நேரம் வானத்து நிலவாய் தொலைவில் நின்று மமதை கொள்கிறாய் சிலநேரம் வீசும் தென்றலாய் சிரித்துக்கொண்டு என்னை கடந்து செல்கிறாய் உன்னை புரிந்து கொள்ள முடியாமல் புயலில் சிக்கிய புழுவாய் என் மனம் தள்ளாடுகிறது!

 பூக்களில் தேனிருக்கும் பூக்கள் அறிவதில்லை வண்டுகள் தெரிந்து வந்தால் அதன் அன்பும் புரிவதில்லை மகரந்த சேர்க்கையில்தான் மௌனமாய் உணர்ந்து கொள்ளும் தன்னில் இத்தனை இன்பங்களா என்று! புரிந்து கொள்ளடிப்பெண்ணே காமத்திற்கு ஒவ்வொரு நாளும் எல்லை உண்டு இந்த உலகத்தில் அன்புக்கு ஏதெடி எல்லை நான் உன்னை அன்பால் நேசிக்கிறேன்! 

அன்பே உன் மௌனம் கலைத்துவிடு என் மனதோடு இணைந்துவிடு உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடவேண்டும் உன் மடியில் முகம் புதைத்து என் அன்பை சொல்லி அழவேண்டும் மனதும் மனதும் சேர்ந்தால்தானே இச்சைகூட சுவைக்கும் என் புழம்பல்கள் உனக்கு கேட்கவில்லையா இல்லை என்னையே உனக்கு பிடிக்கவில்லையா? 

சிலந்தி வலையில் சிக்கிய ஈயாய் தினம் தினம் சாகாமல் சாகிறேனே! வேண்டாம் உன் மௌனம் கலைக்க வேண்டாம் மறுமொழி பேசவேண்டாம் நீ அன்பு அமுதம் தரவேண்டாம்! என் உயிரே வா.... உயிர்வதை சட்டத்தின்கீழ் ஒரு துளி விஷமாவது கொடுத்துவிடு என்னை கருணைக் கொலை செய்துவிடு காலம் உன்னை வாழ்த்தும் என் காதலும் உன்னை வாழ்த்தட்டும்............!

18 comments:

  1. // இந்த உலகத்தில் அன்புக்கு ஏதெடி எல்லை நான் உன்னை அன்பால் நேசிக்கிறேன்... //

    அருமை...

    http://www.seenuguru.com/2013/07/contest-updates-5.html-மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //சிலந்தி வலையில் சிக்கிய ஈயாய் தினம் தினம் சாகாமல் சாகிறேனே//


    அட அட புதிய எண்ணம்

    ReplyDelete
  3. //சில நேரம் வானத்து நிலவாய் தொலைவில் நின்று மமதை கொள்கிறாய் சிலநேரம் வீசும் தென்றலாய் சிரித்துக்கொண்டு என்னை கடந்து செல்கிறாய் உன்னை புரிந்து கொள்ள முடியாமல் புயலில் சிக்கிய புழுவாய் என் மனம் தள்ளாடுகிறது!//
    //சிலந்தி வலையில் சிக்கிய ஈயாய்....//
    எப்படியெல்லாம் உங்கள் உள்ளத்தை அவளுக்குச் சொல்ல முயலுகிறீர்கள்!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  4. எத்தனை நயம் வார்த்தைகளில்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  5. காதலில் உருகி அனுபவித்து எழுதியபோல கடிதம். வார்த்தைகளில் வர்ணனை அழகு சேர்க்கின்றது போட்டியில் வெற்றி பெறநல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  6. சுருக்கமும் உருக்கமுமாய் ஒரு கடிதம். நன்று.

    ReplyDelete
  7. பூக்களில் தேனிருக்கும் பூக்கள் அறிவதில்லை வண்டுகள் தெரிந்து வந்தால் அதன் அன்பும் புரிவதில்லை மகரந்த சேர்க்கையில்தான் மௌனமாய் உணர்ந்து கொள்ளும் தன்னில் இத்தனை இன்பங்களா என்று!

    ரசனை வரிகள்

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  8. சிலந்தி வலையில் சிக்கிய ஈயாய் தினம் தினம் சாகாமல் சாகிறேனே! வேண்டாம் உன் மௌனம் கலைக்க வேண்டாம் மறுமொழி பேசவேண்டாம் நீ அன்பு அமுதம் தரவேண்டாம்! என் உயிரே வா.... உயிர்வதை சட்டத்தின்கீழ் ஒரு துளி விஷமாவது கொடுத்துவிடு என்னை கருணைக் கொலை செய்துவிடு காலம் உன்னை வாழ்த்தும் என் காதலும் உன்னை வாழ்த்தட்டும்............!


    -----------------


    அருமை.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  9. "என்னை வதை படுத்தி உன் மௌன வார்த்தைகளால் என்னை சிறைபடுத்தி விட்டாயே! உன் அன்பின் வாசல் திறக்கவில்லை என்றாலும் லேசாக சன்னலையாவது திறக்கக்கூடாதா..? உன் அன்பின் வாசத்தில் வாழ்ந்துவிட மாட்டேனா? "


    அழகான வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

      Delete
  10. உங்கள் முதல் வருகையாக வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete