Saturday, 6 July 2013

காலத்தால் அழியா கண்ணதாசன் !

சிந்தனைக்கடலே!
செவியின்பத்தேனே!
கவி உலகமொன்றை
தமிழ் உலகுக்கு அற்பனித்தவனே!
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழே கண்ணதாசா நீயல்லவோ....!
தமிழுக்கும் அழிவில்லை
உன் புகழுக்கும் அழிவில்லை!
தமிழ் உனக்கு சிம்மாசனம் கொடுத்தது
அந்த தமிழுக்கே மகுடம்
சூட்டி மகிழ்ந்தாய்
எங்களையும் மகிழச்செய்தாய்!
அருவியாய் கற்பனை கொட்டி
குருவியாய் கவிபாடி
காற்றிலே பாட்டுக்கோட்டை
கட்டி பவனிவந்தாய்!
காற்றுள்ளவரை உன் பாட்டிருக்கும்
அதை தமிழ் உலகம் கேட்டிருக்கும்!
காலங்கள் அனைத்தையும் கணக்கிட்டாய்...........
வாழ்க்கை கோலங்கள் உணரவைத்தாய்!
கண்ணனின் தாசனாய் வாழ்ந்திருந்தாய்!
காரிருளாய் பண்பாடு மறையாமல்
உன் கருத்துக்கள் ஒளி நிலவாய்....
அர்த்தமுள்ள இந்து மதம் நீ கொடுத்தாய்!
எம்மதமும் சம்மதமாய்
எல்லா மதத்துக்கும் காவியம் படைத்தாய்!
நீ காலத்தால் அழியாத பொண்ணோவியமாய்
மனித உள்ளங்களில் நிறைந்திருப்பாய்........

No comments:

Post a Comment