Tuesday, 26 August 2014

உன் சுவாசமே நானாவேன் !

அருகம்புல்லா வளர்ந்த புள்ள 
அரும்பு மலர்   சிரிப்பழகாள் 
கடயாப்பொட்டி கக்கத்திலே 
கருகமணி கழுத்தினிலே 
கலகலக்கும் நடைநடந்து 
களை எடுக்க போரபுள்ள.,.! 

கடயாப்பொட்டி எறக்கவிட்டு 
கக்கத்திலே எனை அணைச்சா 
உன் கறுத்த கண்ணம் செவக்கமட்டும் 
கட்டி முத்தம் நான் தருவேன்
உன் கட்டழகு நோகாமல்!

அட வெட்டிப்பய மவனே
வெட்டவெளி பொட்டலிலே
வெக்கங்கெட்டு பேசிரியே .

புத்திகெட்ட மாமா
ஊரு சனம் பாத்துப்புட்ட
இந்த பொட்டபுள்ள உசுர
பொசுக்குணு போயிடுமே
கொஞ்சம் புரிஞ்சிக்க மாமா!

அடி கட்டான கட்டழகி
கனிவான பேச்சழகி
ஓங் உசுரு எனக்குள்ளே
பத்திரமா வைச்சிருக்கேன்
அந்த ஏமன் வந்து கேட்டாலும்
என் உசுர கொடுப்பேன்டி.

ஏங்ராசாத்தி ஓங் உசுரே
ஒரு நாளும் எனைப்பிரிய
விடமாட்டேனு  மரிக்கொழுந்து
வாசக்காரி உன் மாமன் மனசு தெரியாதா?

கால நேரம் கூடி வரும் காத்திரு மாமா
இந்த மொட்டழகும் கட்டழகும்
என் கட்டழகன் உனக்குதான் மாமா
என் கருகமணி கழட்டி விட்டு
கழுத்தில் தாலி நீ கட்டும்வரை
பொறுத்திரு மாமா

பூ மெத்தை நானாவேன்
பூஞ்சோலை காற்றாகி
உன் சுவாசமே நானாவேன்
இப்ப வழிவிடு மாமா.....!

Wednesday, 11 December 2013

கவிச்சோலை: காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும்...

கவிச்சோலை: காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும்...: கவிச்சோலை: தங்கம் நீ ! : தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றல...

காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும் இதயம் இழந்து உன் நினைவுகள் சுமந்த உயிரின் ஓசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது நம் காதலை!!!

கவிச்சோலை: தங்கம் நீ !: தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றலுக்கு  காத்திருக்கும் ...

Monday, 9 December 2013

கவிச்சோலை: உலக சாதனைக் கவியரங்கம் !

கவிச்சோலை: உலக சாதனைக் கவியரங்கம் !: தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கமும் தென்றல் சமூக நல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் உலக சாதனைகவியரங்கில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா? ...

Wednesday, 20 November 2013

உலக சாதனைக் கவியரங்கம் !

தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கமும் தென்றல் சமூக நல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் உலக சாதனைகவியரங்கில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா? கடைசி தேதி இந்த மாதம் 30ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் இந்த சந்தற்பத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள் கவிதைகளை உடனே அனுப்பிவையுங்கள் நண்பர்களே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பியுங்கள் என அன்போடு அழைக்கிறோம் கவிதைகள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி tamilkavinjarsangam@gmail.com வருக வருக பங்கு பெறுக வாழ்த்துக்கள்

Tuesday, 29 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் ! ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதை .



புத்தாடை பூத்தது புது உலகம் பிறந்தது
புதுமை மனப் பூரிப்பூ எழிலாய் உள்ளப் பொழிவு!

எண்ணங்களில் வண்ண வண்ண பூக்களாய் 
வீதியெங்கும் ஒளி வெள்ள பேரழகு! 

வெடியோசை மின்னல் இடியாய் 
வண்ண வான வேடிக்கை! 

மத்தாப்பூ சிரிப்பாய் மனம் கொண்டாடும் 
மகத்தான பெருநாள்! 

உற்றார் உறவினரும் ஒருமித்த அன்பாய் 
தித்திக்கும் இனிப்போடும் திகட்டா களிப்போடும் 
திகட்டாத அன்போடும்! 

எல்லைகள் கடந்த இன்பப் பெருங்கடலாய் 
இல்லங்கள் தோரும் மற்றவர் மகிழ்ச்சியில் 
மனப் பெருமிதம் கொண்டு .

அன்பு ஊற்றாய் பெருகி உள்ளம்
கொள்ளை கொள்ளும் உண்ணத திருநாள்! 

இருண்ட அரக்கனை அழித்து 
மகாபாரதத்தின் சுதந்திர விடியலாய் 
ஒளிதீபம் ஏற்றிடும் மகாதினம்! 

ஏழைகள் நெஞ்சிலும் மகிழ்ச்சிப் பெருக்கோடு 
இன்முகச் சிரிப்பழகு காணும் இனிய திருவிழா! 

மலர்விழி பூத்த அரும்பு மழலைகளின் 
மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பாய் 
முத்தாய்ப்பாய் உள்ளம் மகிழும் ஒளிவிழா! 

வானம் விட்டு வான வில்லும் இறங்கி வந்ததோ
வாசல்தோரும் சிறுவர்களின் கரங்களிலே 
காட்சி தந்ததோ!!! 

மழலைகளின் சிரிப்பினிலே மயங்கிவிட்டதோ 
வானவில்லும் வானத்துக்கு வழி கேட்டு 
வீதியெல்லாம் சுற்றி வருகுதோ ?

ஏழுவண்ணம் வீதிகளில் ஊர்வலமாய் 
நடந்து செல்லும் பேரழகு காண்பீரோ......! 

இன்று வெண்ணிலவும் விடுமுறையில் 
பூமி வந்ததோ? நம் இல்லங்களில் 
நடமாடும் மங்கையரின்  முகத்தினிலே 
அமர்ந்துகொண்டதோ ?
ஆனந்தமாய் நாம் கொண்டாடும் 
தீபாவளி நன்னாளே.....!